Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
உடற்பயிற்சி வீராங்கனையின் காதல் வலையில் புட்டின்; எதிர்வரும்ஜூனில் திருமணம்?
[19 - April - 2008] [Font Size - A - A - A]
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கனையை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

56 வயதான புட்டின் 24 வயதான அலினா கபேவா என்ற புகழ்பெற்ற உடற்பயிற்சிவீராங்கனையுடன் காதல்வயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், புட்டினின் முதல் மனைவி லுட்மியாவை (வயது 50) அவர் விவாகரத்து செய்யவுள்ளார்.

லண்டனிலிருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிகையும் ரஷ்ய பத்திரிகையான மொஸ்கோவஸ்கியும் இத் தகவலை வெளியிட்டுள்ளன.

சிட்னி மற்றும் ஏதேன்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா சார்பில் பங்கேற்றுள்ள அலினா கபேவா தற்போது ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து புட்டின் விலகிய ஒரு மாதத்துக்குப் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று அச் செய்தி கூறுகிறது. புட்டினின் சொந்த ஊரான செயிட் பீட்டர்ஸ் பார்க் நகரில் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி இத் திருமணம் நடைபெறும். மொஸ்கோவில் உள்ள உணவுவிடுதி ஒன்றில் புட்டினும் அந்த வீராங்கனையும் முத்தமிடுவது போன்ற படம் இணையத் தளம் ஒன்றில் வெளியாகி உள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தி கூறுகிறது.

உடற்பயிற்சி வீராங்கனை அலினா அதிரடிப் படம் ஒன்றில் நடித்துள்ளார். மொடலிங்கும் செய்து வருகிறார்.

இச் செய்திக்கு ரஷ்ய குடியரசு மாளிகையான கிரெம்ளின் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.

புட்டின் தனது மனைவி லுட்மியாவை விட்டுப் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

னில் திருமணம்?லண்டன்: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கனையை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 56 வயதான புட்டின் 24 வயதான அலினா கபேவா என்ற புகழ்பெற்ற உடற்பயிற்சிவீராங்கனையுடன் காதல்வயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், புட்டினின் முதல் மனைவி லுட்மியாவை (வயது 50) அவர் விவாகரத்து செய்யவுள்ளார். லண்டனிலிருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிகையும் ரஷ்ய பத்திரிகையான மொஸ்கோவஸ்கியும் இத் தகவலை வெளியிட்டுள்ளன. சிட்னி மற்றும் ஏதேன்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா சார்பில் பங்கேற்றுள்ள அலினா கபேவா தற்போது ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். ஜனாதிபதி பதவியிலிருந்து புட்டின் விலகிய ஒரு மாதத்துக்குப் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று அச் செய்தி கூறுகிறது. புட்டினின் சொந்த ஊரான செயிட் பீட்டர்ஸ் பார்க் நகரில் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி இத் திருமணம் நடைபெறும். மொஸ்கோவில் உள்ள உணவுவிடுதி ஒன்றில் புட்டினும் அந்த வீராங்கனையும் முத்தமிடுவது போன்ற படம் இணையத் தளம் ஒன்றில் வெளியாகி உள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தி கூறுகிறது. உடற்பயிற்சி வீராங்கனை அலினா அதிரடிப் படம் ஒன்றில் நடித்துள்ளார். மொடலிங்கும் செய்து வருகிறார். இச் செய்திக்கு ரஷ்ய குடியரசு மாளிகையான கிரெம்ளின் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. புட்டின் தனது மனைவி லுட்மியாவை விட்டுப் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
உடற்பயிற்சி வீராங்கனையின் காதல் வலையில் புட்டின்; எதிர்வரும்ஜூனில் திருமணம்?
`அணுவாயுதங்களை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கான ஆற்றலை பாகிஸ்தான் கொண்டிருக்கிறது'
மலேசியாவின் `மக்கள்' ஓசை பத்திரிகைக்கு திடீர் தடை
ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் மீதான தடைகளை மேலும் இறுக்கமாக்க வேண்டும்
இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் ராய்ட்டர் படப்பிடிப்பாளர் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com