கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதிச் சோதனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக மாவட்டத்தில் ஐம்பது வீதிச் சோதனை நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புக் கடமைக்காக பத்தாயிரம் பொலிஸார் அமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் கிழக்கு மாகாணத்திலுள்ள தபாலகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் 29 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதால் அதற்கான வாக்குச் சீட்டுக்கள் நேற்று முதல் தபாலகங்களுக்கு வந்து சேரத் தொடங்கியுள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உரியவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதால் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட தபாலகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.