பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக கே.பாயிஸ் நியமிக்கப்பட்டதன் பின்னர், நிறைவேற்றப்படாது தேக்க நிலையில் இருந்த பல பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடை வள அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புத்தளம் வலய கல்வி அலுவலகங்களுக்கு பிரதி அமைச்சர் பாயிஸ் மேற்கொண்ட திடீர் விஜயத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாடசாலைகளுக்கான பல உடனடி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆப்தீன்,யஹபா, தாஹீர் மற்றும் புத்தளம் நகர சபை தலைவர் எம்.என்.எம். நஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டதாகவும் புத்தளம் பாட சாலைகளுக்கான அபிவிருத்தி வேலைகள் குறித்த அறிக்கையொன்றை பிரதி அமைச்சர் பாயிஸ் கோரியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.