மஹவெல பொலிஸ் பிரிவில் மில்லவான அரச தோட்டத் தொழிலாளரும் உத்தியோகத்தர்களுமாக 287 பேர் பணிப் புறக்கணிப்பில் கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
மில்லவான தோட்டத்தின் காவலாளியை தமிழ் - சிங்களப் புதுவருடத் தினத்தன்று இரவு கிராமவாசிகள் சிலர் கடுமையாகத் தாக்கியதுடன், காவலாளியின் வீட்டையும் நொருக்கிச் சேதப்படுத்தியமை தொடர்பாகவே இப்பணிப்புறக்கணிப்பு நடைபெற்றதாக தோட்ட அதிகாரசபை தெரிவித்தது.
இத்தாக்குதல் தொடர்பாக மஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதியப்பட்ட போதிலும், இதுவரையில் எவரையும் பொலிஸாரால் கைதுசெய்ய முடியவில்லை என்பது குறித்தும் தோட்டத் தொழிலாளர்கள் தமது அதிருப்தியையும் விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளாகிய மில்லான அரச தோட்டக் காவலாளி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.