பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியிலே பெரும் இழப்புகளுக்கும் சீர்குலைதலுக்குமுள்ளாகி இருக்கும் விடுதலைப் புலிகளின் தோல்வியை தடைப்படுத்த முடியாதென தமிழீழக் காவல்துறையிலிருந்து தப்பித்து இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள காவல்துறை உறுப்பினர்கள் மூவர் தெரிவித்துள்ளதாக இராணுவம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழக் காவல்துறையிலிருந்து தப்பி இராணுவத்தில் சரணடைந்த மூவரும் கூறியதாக இலங்கை இராணுவத் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
்அமல் சுமன்னியன், ரத்னகுமார் சதீஸ் மற்றும் செபஸ்தியன்பிள்ளை அருள்ராஜ் ஆகியோரே தமிழீழக் காவல்துறையிலிருந்து தப்பித்து வாக்குமூலமளித்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 31 ஆம் திகதி அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் இவர்கள் மூவரையும் விடுதலை செய்ததுடன் இன்னும் காவல்துறை உறுப்பினர்கள் 34 பேருடன் வேறொரு இடத்தை நோக்கி காவல் பணி செய்வதற்காக பெரும் காட்டு பிரதேசத்தின் நடுவினால் மன்னார் வடக்கு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
உயிலன்குளம் வடக்கு, பரப்பகன்டல் பிரதேசத்தில் பணி செய்வதற்கு என்றும் இதில் 25 பேருக்கு கட்டளையிட்டிருப்பதுடன் மீதி 9 பேரையும் யோத கால்வாய் கிழக்கு பிரதேசத்தில் செட்டியார்கட்டை அடம்பனுக்கு அண்மையில் இருக்கும் காவல்துறைச் சோதனைச் சாவடியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்கள்.
இந்த காவல்துறை சோதனைச் சாவடியில் 15 பேர் பணி செய்து கொண்டிருந்ததோடு அப்போதைக்கு இரண்டு பேரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள். மடு பிரதேச புலித் தலைவரான எழில் கண்ணன் என்பவர் மீதி 9 பேரையும் அழைத்துக் கொண்டு அந்தச் சோதனைச் சாவடிக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அவ்விரண்டு பேரையும் தேட முடியாமல் போய் விட்டார்கள்.
மேலும் இவர்கள் மூவரும் தமக்கு நேரிடப்போகும் ஆபத்துகளைக் கூட பாராமல் தப்பியோடுவதற்கு முடிவெடுத்து 2008 ஏப்ரல் இரண்டாம் திகதி அடம்பன் சோதனைச் சாவடியில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக படைக்குச் சேர்க்கப்பட்டு ஆயுதப் பயிற்சியும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வன்னியிலுள்ள பலவந்தமாக கடத்தப்பட்டவர்களில் 80 வீதத்துக்கு அதிகமானோர் இன்று முற்றும் முழுதாக அதிருப்தி அடைந்து தம் தலைமைப் பீடத்தையும் இயக்கத்தையும் எதிர்த்து நிற்கின்றதுடன் தப்பிச் சென்று மறைவதற்கான தகுந்த காலம் வரும் வரை விழிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் தப்பி வந்தவர்கள் கூறினார்கள்.
மேலும் பல்வேறு பிரதேசங்களில் காவல்துறை பணிபுரியுமாறு உத்தரவு இட்டுள்ளதுடன் காவல்துறையில் பணிபுரியும் போது தப்பி ஓடியதன் காரணமாக சில காலங்களுக்கு சிறையில் இருக்கவும் நேரிட்டுள்ளதுடன் அக்காலகட்டத்தில் இவ்வுறுப்பினர்களுக்கு தம் கூட பயிற்சி பெற்ற சில பாதிக்கப்பட்ட உறுப்பினர்களையும் சந்திக்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
சரணடைந்த காவல்துறை உறுப்பினர்கள் மூவரும் தற்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களின் பராமரிப்பின் கீழ் விஷேட குறுகிய கால புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்பு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் விஷேட புனர்வாழ்வுப் பயிற்சியிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.