அவிசாவளையிலுள்ள இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் தொலைபேசி பரிவர்த்தன நிலையம் மீது மின்னல் தாக்கியதால் அதன் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் பரவலாக தோன்றும் இடி, மின்னல் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு தோன்றிய மின்னல் காரணமாக அவிசாவளை ரெலிகொம் பரிவர்த்தன நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவிசாவளை, ருவான்வெல, கிதுல்கல மற்றும் யட்டியாந்தோட்ட பிரதேசங்களின் தொலைபேசி சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.