|
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை வன்னிப் பிராந்தியத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.
வன்னிப் பிராந்தியத்தில் நடைபெறும் மோதல்கள் குறித்த நிலைவரங்களை அறியும் பொருட்டு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி வன்னியின் இராணுவத் தலைமைச் செயலகத்தில் இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பொன்றையும் நடத்தினார். இச்சந்திப்பின்போது வன்னி இராணுவத் தலைமைச்செயலக தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மற்றும் அப்பகுதி இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். |