கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் நாவிதன்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய முகாம், சவளக்கடை, சடயந்தலாவ கிராமங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளதுடன் மக்களைச் சந்தித்தும் வருகின்றனர்.
குடியேற்றக் கிராமமான இப்பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்களும் குறைந்தளவு சிங்கள மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது பிரதேச மக்களின் உறவினர்களே இங்கு வசிக்கின்றனர்.
தமிழ் வேட்பாளர்களின் வருகை குறைந்த நிலையில் யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர்களையே அதிகம் இங்கு காணமுடிகிறது.
தேர்தல் பிரசாரங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருவதுடன் பொலிஸாரும் வேட்பாளர்களின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.