பிரதி சுகாதார அமைச்சரும் பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷை கௌரவிக்கும் பாராட்டு விழா அப்புத்தளை இந்துக் கலாசார மண்டபத்தில் நாளை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அப்புத்தளை நகரசபைத் தலைவர் சுமித் சமயதாச தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவை, சமூக, சமய ஸ்தாபனத்தினர் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தோட்டத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷின் குறுகிய கால அரசியல் பிரவேசத்தில் அரசியல் ரீதியிலான அளப்பரிய சேவைகளுக்காகவும் தொழிற்சங்க ரீதியில் ஆற்றிய பணிக்காகவும் வழங்கப்பட்ட கலாநிதிப் பட்டத்திற்காக பிரதி அமைச்சரை கௌரவிக்கும் வகையிலேயே இப்பாராட்டு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.