புத்தளம் றஹ்மத் நகர் கிராமத்திற்குள் வெள்ளை வானில் வந்த ஆயுதபாணிகள் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
புத்தளம் மன்னார் வீதியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் ஆம் பக்கம் பார்க்க...
புத்தள... (முன்பக்கத் தொடர்ச்சி)
மேற்படி கிராமத்திற்குள் நேற்று வெள்ளிக்கிழமை காலை, இலக்கத் தகடற்ற வெள்ளைவானில் ஆயுதங்கள் சகிதம் வந்தவர்களே அகதிகளாகத் தங்கியிருப்போரை அச்சுறுத்தி விட்டுச் சென்றதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னரும் இங்கு வெள்ளை வானில் வந்தோர் பொது மக்களை அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.