Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
[19 - April - 2008] [Font Size - A - A - A]
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு வியாழக்கிழமை பிரணாப் முகர்ஜியின் இல்லத்தில் நடைபெற்றது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற அமைதி சமாதான மகாநாடு குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதங்கள் குறித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் ஒஸ்லோ மாநாட்டில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் நோர்வே நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் எரிக் சொல்ஹெய்முடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் வைகோ பிரணாப் முகர்ஜியிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது வியாழன் மாலையில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவின் நகலையும் பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தார்.

இலங்கை அரசின் இனக்கொலையால், இராணுவத் தாக்குதலால் தொடர்ந்து தமிழர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனவும் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டதாகவும் அதற்குப் பிரதமர் இது முக்கியமானது என்பதால் வெளிவிவகாரத்துறை அமைச்சரோடு இது குறித்து விவாதிக்கிறேன் என்று கூறியதனை பிரணாப் முகர்ஜியிடம் வைகோ தெரிவித்தார்.

இலங்கைக்கு ஆயுதம் தரவில்லை என்றும் இராணுவத்தின் மூலம் தீர்வு ஏற்படுத்த முடியாது என்றும் இதனை இலங்கையிலேயே இருந்து வருகின்ற அரச தலைவரானாலும் அமைச்சரானாலும் யார் வந்தாலும் இதனை வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் தன்னிடம் கூறியதாக பிரணாப் முகர்ஜியிடம் வைகோ கூறினார்.

அதற்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்சினையில் இலங்கை அரசின் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் கூடாது என்றும், நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம் என்றார்.

போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்று வைகோ கூறினார்.

இது குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வைகோ மீண்டும் சந்திக்க இருப்பதாகக் கூறினார்.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com