Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
[19 - April - 2008] [Font Size - A - A - A]
* சர்வமத அமைப்பு கோரிக்கை

நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுக்க எல்லாவித போர் இராணுவ ரீதியான நடவடிக்கைகள், நடமாட்டங்களில் இருந்து மடுத்திருப்பதியையும், ஏனைய வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறு மன்னார் மறைமாவட்ட சர்வமத அருட்பணி மையம் இலங்கை அரசாங்கத்திடமும் தமிழீழ விடுதலைப்புலிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்த மையத்தின் இந்து சமயத் தலைவர், இஸ்லாமிய சமயத்தலைவர், மறைமாவட்ட சர்வமதத் தலைவர் ஆகியோர் ஒப்பமிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களுக்கு மடுத்திருப்பதியானது வணக்கத்திற்கும் பக்திக்குமுரிய ஆன்மீகத் திருத்தலமாக விளங்குகிறது. கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாது ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுக்கும் மருதமடு தனித்துவமானதோர் அருட்தலமாகத் திகழ்ந்து, ஆன்மீக அருளைப் பொழிந்து வருகின்றது. பாதுகாப்பைத் தேடும் மக்களுக்கு மருதமடு ஓர் அடைக்கல பூமியாகவும் இடம்பெயர்ந்தோருக்கு புகலிடமாகவும் இருந்து வந்தது. அனைத்து இராணுவ அல்லது அரசியல் செயற்பாடுகளும் முற்று முழுதாக இங்கு தடைசெய்யப்பட்டு வந்தன. கடந்துபோன ஆண்டுகள் யுத்தகாலமாக இருந்தபோதிலும் மடுத்திருப்பதி தன் நிலையை இழக்கவில்லை. அன்றும் இன்றும் இப்புனித இடத்தில் கோவில் கொண்டிருக்கும் எம் அன்னை இலங்கையின் சகல பகுதிகளிலும் உள்ள எல்லோருக்கும் சகல வரங்களையும் அதிகமாய் வழங்கிக்கொண்டே வருகின்றாள்.

மருதமடுத் தாயின் யூபிலி ஆண்டாகிய 2000 ஆம் ஆண்டிலே, இலங்கைத் தேசம் முழுவதும் அன்னையின் திருச்சொரூபத்தைத் தாங்கிச் சென்றபோது இனம், மொழி, மதம் கடந்து அன்னையை பார்த்து சமாதானத்திற்காகக் கண்ணீர் வடித்த மக்களின் குரல் இன்றும் எம் இதயத்திற்குக் கேட்கிறது. அன்னை தந்த அமைதி வாழ்வும், அவர் தந்த சமாதான நாட்களும் சிதைந்து இன்று எத்தனையோ மக்களின் அழுகுரல்கள் அமைதிக்காக செபித்துக் கொண்டே இருக்கிறது.

மடுத்திருப்பதியைச் சமாதானப் பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தி போர் நடவடிக்கைகள், இராணுவ நடமாட்டங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டு, இத்திருத்தலம் தனது அரிய பணியைத் தொடர ஆவன செய்துதர வேண்டுமென்று இலங்கை ஜனாதிபதியையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் பல தடவைகளில் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஆயினும், இன்று மடுத்திருப்பதியில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் இத்திருத்தலமும், அதன் புனிதத்துவமும் மாண்பும் சீர்குலைந்துள்ளதையிட்டு எமது சர்வமத அருட்பணி மையமானது ஆழ்ந்த கவலை கொள்கின்றது. இந்த நெருக்கடியான நேரத்தில் கத்தோலிக்க மக்களுக்கும் மருதமடுத் தாயாரின் பக்தர்களான மற்றைய சமயங்களின் அன்பர்களுக்கும், இலங்கையின் மதத் தலைவர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இத்திருத்தலத்தைப் பாதுகாக்குமாறு மன்னார் மறைமாவட்ட சர்வமத அமைப்பானது உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது.

மருதமடுத் திருப்பதியையும், ஏனைய வழிபாட்டு ஸ்தலங்களையும் இராணுவ அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்று முழுதாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அனைத்து சர்வமத அன்பர்கள் சார்பாக மன்னார் மறை மாவட்ட சர்வமத அமைப்பானது வேண்டுகோள் விடுக்கின்றது.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com