Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
[19 - April - 2008] [Font Size - A - A - A]
* மன்மோகன் சிங் வைகோவிடம் தெரிவிப்பு

இலங்கையில் தமிழ் மக்கள் கஷ்டப்பட்டால் அது தொடர்பாக இந்திய அரசாங்கம் அலட்சியப்படுத்திவிட முடியாதென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் புதுடில்லியில் இந்தியப் பிரதமரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தபோதே இதனை அவர் தெரிவித்ததாக வைகோ கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வைகோ இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வைக் காண்பதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்துமாறும் கேட்டிருக்கிறார்.

ஏப்ரல் 10,11 நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற தெற்காசியாவில் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான மாநாட்டின் பெறுபேறு குறித்து தான் பிரதமர் மன்மோகனிடம் விபரமாக எடுத்துக் கூறியதாக வைகோ ்இந்துீ பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் தமிழர்களின் பாதுகாப்பும் உயிரும் ஆபத்தானதாக இருப்பதாகவும் பிரதமரிடம் தான் கூறியுள்ளதாகவும் வைகோ தெரிவிக்கிறார்.

இராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். உணவு, மருந்துகளின்றி, காடுகளுக்குள் தமிழர்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று நான் நிலைமையை பிரதமரிடம் விபரமாக எடுத்துக் கூறியதுடன் இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா விநியோகிக்கக் கூடாதெனக் கோரியதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் தன்னிடம் கூறியதாகவும் இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு இருக்க முடியாது என்று அவர் தெரிவித்ததுடன் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை விநியோகிப்பதில்லையென உறுதியளித்ததாகவும் வைகோ குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், வெளிவிவகார அமைச்சருடன் (பிரணாப் முகர்ஜி) இந்த விடயம் குறித்து தான் கலந்தாலோசித்து சிறப்பான முறையில் எதனை செய்ய முடியுமெனப் பார்ப்போம் என்று மன்மோகன் சிங் தெரிவித்ததாகவும் வைகோ கூறியுள்ளார்.

இதேசமயம் இந்த விடயம் குறித்து பிரணாப் முகர்ஜியை தான் சந்திக்க விருப்பதாக வைகோ தெரிவித்திருக்கிறார்.

வைகோ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வியாழக்கிழமை சமர்ப்பித்த மகஜரில் தெரிவித்திருப்பதாவது;

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் விபரிக்க முடியாத துன்பத்தையும் நெருக்கடிகளையும் மனித உரிமைமீறல்களுக்கு இலக்காகி இருப்பதையும் உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கண்மூடித்தனமான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், தமிழ் மக்கள் காணாமற் போதல் என்பன அங்கு (இலங்கையில்) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் இளைஞர்களும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். ஆயுதப்படையினரால் கடத்திச் செல்லப்படும் அந்த இளைஞர்கள் குறித்து மேலதிகமான எந்தத் தகவல்களும் கிடைப்பதில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டு விடுவதாக அஞ்சப்படுகிறது என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com