நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது அந்நாட்டவர் சிலருடன் பேசிக்கொண்டிருக்கையில், நோய்கள் பற்றிய பேச்சு எழுந்த போது அவர்களில் பலர் தங்களுக்கு நீரிழிவு இருப்பதாக கூறினார்கள்.
அப்படியென்றால், வியாதியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் பாவிக்கிறீர்களா? என்று கேட்டேன்.
அவர்கள் சிரித்துவிட்டு, "நீரிழிவு என்பது ஒரு வியாதியே அல்ல. உணவில் நாம் கட்டுப்பாடாக இருந்தால் அதை கட்டுப்படுத்த முடியும்" என்றார்கள்.
நீரிழிவை எவருக்கும் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் வாதிட்டார்கள்.
நம் நாட்டில் நீரிழிவு வியாதியுள்ளவர்கள் பலர், விரும்பியதையெல்லாம் சாப்பிட்டுவிட்டு, மாத்திரைகளை விழுங்குகிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டில் அக்கறை செலுத்துவதே இல்லை.
இவர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய ஒரு தாரக மந்திரம் "உணவே மருந்து".