லொஸ் ஏஞ்சல்ஸ்:இறந்தவர்களின் அஸ்தியை நிலவுக்கு அனுப்பும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நெருங்கிய உறவினர்கள் இறந்து விட்டால் அவர்களின் அஸ்தியை இமய மலையில் தூவுவதும் புண்ணிய நதிகளில் கரைப்பதும் வழக்கம். இனி அஸ்தியை நிலவுக்கே அனுப்பி வைக்கலாம். இதற்கான செலவு ரூபா 8 இலட்சம்.
அமெரிக்காவில் ஹூஸ்டனில் செயற்பட்டு வருகிறது செலஸ்டிஸ் நிறுவனம். 14 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முக்கிய நபர்களின் அஸ்தியை இந்நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. தற்போது நிலவுக்கு அஸ்தியை அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது. இது குறித்து நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் சாபெர் கூறியதாவது;
"அஸ்தி உள்ள சிறு கலசங்கள் ்ரோபோ லேன்டர்" என்ற கலத்தில் வைக்கப்பட்டு ரொக்கெட் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு ்ரோபோ லேன்டர்ீகள் தரை இறக்கப்படும். ஒரு நபரின் அஸ்தியை நிலவுக்கு எடுத்துச் செல்ல ரூ. 8 இலட்சம் கட்டனணம். அடுத்த ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயற்பாட்டுக்கு வருமெனத் தெரிவித்தார்.