* சிம்பாப்வே எதிர்க்கட்சிகள் தெரிவிப்பு
சிம்பாவேயில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால், அதனை தம்மால் ஏற்கமுடியாதென எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்தத் தேர்தலில் தாமே வெற்றி பெற்றதாக நம்பும் எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம், ஜனாதிபதி பதவிக்கும் மற்றும் பாராளுமன்றத்துக்குமான தேர்தல் முடிவுகளில் அரசாங்கம் மோசடி செய்ய முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
முகாபேயின் ஷானு பி.எவ்.கட்சியும் ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கமும் சம அளவிலான இடங்களை வென்றதாக முதல் அதிகாரபூர்வ முடிவு கூறுகிறது. ஆனால், அரசாங்கக் கட்சியின் பலம்மிக்க இடங்களில் எதிர்க்கட்சி முன்னணியில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு முடிவடைந்து 30 மணித்தியாலங்களின் பின்னரே தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இது தேர்தல் கண்காணிப்பாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளதாக நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.