யாழ்ப்பாணம் பண்ணை மார்புநோய் சிகிச்சை நிலையத்துக்கு சர்வதேச புலம்பெயர்ந்தோர் நிறுவனம் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான நவீன எக்ஸ்ரே கருவியை வழங்கமுடிவு செய்திருப்பதால், இச்சிகிச்சை நிலையத்தின் சேவையை மேம்படுத்தக்கூடியதாகவுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தகவல் தருகையில்; யாழ் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நூற்றி இருபது காசநோய் தொற்று இருப்பவர்களை இனம்கண்டு சிகிச்சை வழங்கி வருகின்றோம்.
மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகக் காணப்படுவதுடன், வறுமையும் மற்றொரு காரணமாகக் காணப்படுவதால் பலர் இந்நோய்க்கு உள்ளாகிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நாட்டில் இருந்து காசநோயை முற்றாக ஒழிக்க வேண்டுமானால், சுகாதாரப் பகுதியினருடன் சமூக அமைப்புகளும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்வது அவசியமானதென சுட்டிக்காட்டியுள்ளார்.