* பிரதிஅமைச்சர் வடிவேல்சுரேஷ்
மொனராகலை பிரதேச சபை உபதலைவர் ஏ.என். முத்துலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை கேட்டு,பெரும் அதிர்ச்சிக் குள்ளானேன். அவரின் இழப்பானது, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று பிரதி சுகாதார அமைச்சரும்,பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்தாவது; பெரும்பான்மை மக்கள் பெரும்பாலாகவுள்ள மொனராகலைப் பகுதியில் சிறுபான்மை தமிழ் மக்களின் காவலனாக இருந்து வந்ததுடன் மொனராகலைப் பிரதேச சபையின் உபதலைவராகவும், டாக்டராகவும் இருந்து அரும் பணியாற்றிவந்தவர்
இக் கொலை மனித நேயம் கொண்ட அனைவருக்குமே விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகுமென்றே நான் கருதுகின்றேன்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நிலைப்பாட்டில் தன்னை நாடி வந்த அனைவருக்கும் இனம், மதம் பாராது சேவைற்றியவர்.
மொனராகலை தமிழ் மக்களின் காவலனாக அம் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவருமான டாக்டர் முத்துலிங்கம். பெரும்பான்மை சிங்கள மக்களினதும் நமபிக்கைக்கும், விசுவாசத்திற்கும் பாத்திரமாகவே இருந்து வந்துள்ளார்.
இக் கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை உடன் கண்டு பிடித்து, அக் கயவர்களை நீதி முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண பிரதி பொலிஸ் அதிபரையும் கேட்டுள்ளேன்.
அத்துடன் இவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.