பிறந்த நான்கே நாட்கள் நிரம்பிய சிசுவொன்றை ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தமை தொடர்பாக வத்தேகம - பன்விலப் பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய் உட்பட நான்கு பேர் வத்தேகம பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதேச வர்த்தகரொருவருக்கு நாலு நாள் வயது சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டிருப்பதாகவும், விற்பனையின் மூலம் பெறப்பட்ட பணத்தொகையில் 96 ஆயிரம் ரூபா பொலிஸாரால் மீட்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சிசு விற்பனை மோசடி தொடர்பாக தாய், தந்தை, பாட்டன் மற்றும் சகோதரன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்று புதன்கிழமை இந் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருப்பதாகவும் வத்தேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார தெரிவித்தார். விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன.