வெலிஓயா-ஜனகபுர இராணுவ முகாமில் இருந்து தப்பியோடிய தினேஷ் எக்கநாயக்க என்ற 21 வயது இராணுவ வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.
இவர் சம்பவ தினம் முகாமில் இருந்து தப்பியோடி வந்து பதவியாவில் உள்ள காவலரண் ஒன்றில் தண்ணீர் கேட்டதாகவும், அப்போது அங்கிருந்த ஊர்காவற்படை வீரர் தண்ணீர் எடுக்க அருகில் செல்லவே அவரின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.