Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
[02 - April - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க.எம்.பி.கயந்த கருணாதிலக்க

எம்.ஏ.எம்.நிலாம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எவருமே ஒத்திவைக்குமாறு கோராத நிலையில், அரசு தரப்பு தேர்தல் எக்காரணம் கொண்டும் பிற்போடப்படமாட்டாது என பிரசாரப்படுத்துவதில் பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி, அரசு தரப்புக்குச் சவாலாக போட்டியிட கட்சி தீர்மானித்ததையடுத்து ஆளும் தரப்பு தடுமாற்றமடைந்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியது.

ஜனாதிபதி தேர்தலில் புலிகளின் ஒத்துழைப்புடன் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தடுத்து நிறுத்தி மேற்கொண்ட ஜனநாயக விரோதச் செயலைக் கையாண்ட மகிந்த ராஜபக்ஷ இன்று கிழக்கு மாகாணசபையை புலிகளுடன் சேர்ந்து ரணில் பறிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கத் தொடங்கி இருப்பதாகவும் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

`மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலின் போது அத்தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்தது போன்று கிழக்கு மாகாண சபைத்தேர்தலையும் பகிஷ்கரிக்கும் என்று அரசாங்கத்தரப்பு கனவு கண்டது. ஐ.தே.க.வை.தவிர்ப்பதற்காக சவால் வேறு விட்டுப் பார்த்தனர். திடீரென கட்சி இத்தேர்தலை சந்திப்பதென எடுத்த முடிவால் ஜனாதிபதியும் ஆளும் தரப்பும் குழம்பிப் போயுள்ளனர்.

ஆயுதக்குழுவை வைத்து கிழக்கு மாகாணசபையையும் தம்வசப்படுத்திக் கொள்ள முடியுமென அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல், மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல் என்பவற்றின்போது இடம்பெற்ற சம்பவங்களை மக்கள் அறியாமலில்லை, மறந்துவிடவுமில்லை. அன்று தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்தனர். பின்னர் மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆயுதக்குழுவை நிறுத்தி அதிகாரத்தைப் பெற்றனர்.

பொதுஜன ஐக்கிய முன்னணியோ, சுதந்திரக்கட்சியோ தனித்து கிழக்கில் அதிகாரத்தைப்பெற முடியாது என்பதை அரசாங்கம் நன்கு தெரிந்து வைத்துள்ளது. ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி மீது தமிழ் மக்களும் முஸ்லிம்களும் பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே தான் நாம் தைரியமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போட்டியிடத் தீர்மானித்தோம்.

இதனைக் கேள்விப்பட்ட பின்னர் ஜனாதிபதியும், அரசாங்கமும் குழப்பமடைந்து காணப்படுகின்றனர். புலிகளுடன் கைகோர்த்த மகிந்த ராஜபக்ஷ இப்போது பிள்ளையானை இறுக அணைத்துக்கொண்டு ரணில் புலிகளுடன் சேர்ந்து கிழக்கு மக்களுக்கு துரோகமிழைக்கப் போவதாக பிரசாரப்படுத்துகின்றார். இந்த ஏமாற்று வார்த்தைகளை நம்ப கிழக்கு மக்கள் தயாராகவில்லை. கிழக்குத் தேர்தல் பின்போடப்படமாட்டாது என்று அரசுதரப்பினர் புதுக்கதை பேசுகின்றனர். தேர்தலை பின்போடுமாறு யாராவது கேட்டார்களா? கேட்காதவொன்றை வைத்துக் கொண்டு வாய் பிதற்றுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

பெற்றோலிய விலை அதிகரிக்கப்படமாட்டாது என்று கூறிக் கொண்டே திடீரென விலை அதிகரிக்கப்படுவதைப் போன்று தேர்தல் பிற்போடப்படமாட்டாது என்று கூறிவிட்டு போலிக் காரணம் காட்டி தேர்தலை அரசு தவிர்க்கப்போகின்றதோ என்ற சந்தேகம் வலுவடைந்து வருகின்றது.

இத்தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை அரசும் பாதுகாப்புத் தரப்பும் உறுதி செய்ய வேண்டும். பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதம் களையப்படவேண்டும். கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரிடம் மட்டுமே ஆயுதம் இருக்க வேண்டும். ஏனையவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும்.

அங்குள்ள அரசியல்வாதிகள் வேட்பாளர்கள், பொதுமக்கள் அனைவரது பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு அதிஉச்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டு" மெனவும் தமது கட்சி வலியுறுத்துவதாக ஜயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com