மன்னார் முருங்கன் ஆஸ்பத்திரி மீது நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் ஆஸ்பத்திரிக்கு சேதங்களேற்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை 6.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய ஷெல் தாக்குதலிலேயே ஆஸ்பத்திரியின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், இத்தாக்குதலால் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கோ அல்லது நோயாளர்களுக்கோ எதுவித பாதிப்புமேற்படவில்லையென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம், ஒரு சில ஷெல்கள் முருங்கன் அரசினர் பாடசாலைக்கு அருகிலும் வீழ்ந்துள்ளன. அந்த நேரத்தில் எவருமே பாடசாலைக்குச் சமுகமளித்திராததால் எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை.
முருங்கன் பகுதியில் இடம்பெற்ற இந்தச் ஷெல் தாக்குதலால் அப்பகுதியில் சிறிதுநேரம் பெரும் பதற்றம் நிலவியது.
இந்தச் ஷெல் தாக்குதலையடுத்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.