முல்லைத்தீவில் தொடர்ந்தும் விமானப் படை விமானங்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமையும் முல்லைத்தீவில் இரு பகுதிகளில் கடும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
நேற்றுக் காலை அலம்பில் பகுதியில் இரு விமானங்கள் பல தடவைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
மீண்டும் நேற்று மாலை உடையார்கட்டு பகுதியில் கடும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட முகாம்கள் மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.