இரத்தினபுரி வேவல்வத்தை பலாங்கொடை மாற்று வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ் சாரதியும் நடத்துனநரும் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாயைில் சிகிச்சை பெற்று வருவதாக வேவல்வத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி வேவல்வத்தை- பலாங்கொடை வீதியில் கலபட பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தாக்கில் தனியார் பஸ்ஸொன்று வீழ்ந்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பயணிகளை இறக்கிவிட்டு பின்னர் பஸ்ஸினை கழுவிச் சுத்தம் செய்த பின்னர் பஸ்சாரதி தனது சொந்த ஊரான பலாங்கொடை நோக்கி சென்றபோதே இந்த பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானபோது பஸ்ஸின் சாரதியும் நடத்துநர் மட்டுமே இருந்துள்ளனர்.
சாரதி பஸ்ஸை செலுத்தும்போது நித்திரை கொண்டதானாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.