நான்கு பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் உட்பட பிள்ளைகள் நால்வரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாங்கொடை பொலிஸ் பிரிவிலுள்ள ராசகலை ஹெரமிட்டிகலை என்ற தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது;
"தனது கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதனையறிந்த மனைவி மனம் விரக்தியடைந்த நிலையில் தனது நான்கு பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது தகவலறிந்த பிரதேச மக்கள் அதனை தடுத்து நிறுத்தி மேற்படி ஐவரையும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அதன் பின்னர் ஐவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.