பதுளை மாநகரசபை எல்லைக்குள் பதுளைப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது எட்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ஆறு மணித்தியாலங்களாக இத் தேடுதல் இடம்பெற்றது.
பதுளை மாநகரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இச்சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டதாக பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக்க விஜயரட்ன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் எட்டு இளைஞர்களும் தமிழ் இளைஞர்களாவர். இவர்களிடம் தமது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலான எந்தவொரு ஆவணமும் இல்லாததாலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனரென்றும் விசாரணைகளின் பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்படுவரென்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.