|
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக்கில் இருந்து கொழும்பு, கண்டி, பதுளை, வவுனியா, மதவாச்சி, பொலநறுவை போன்ற தூர இடங்களுக்கான பஸ்சேவைகளை நடாத்த இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தின் பிரதம பிராந்திய முகாமையாளர் எச்.என்.எம். நசீர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் விசேட பணிப்பின் பேரில் இந்த தூரபஸ்சேவைகள் இம்மாதம் 5 ஆம் திகதி முதல் பயணிகள் நலன் கருதி அம்பாறை, அக்கரைப்பற்று, காத்தான்குடி, கல்முனை, களுவாஞ்க்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், சம்மாந்துறை, வாழைச்சேனை ஆகிய இ.போ.ச. சாலைகளால் நடாத்தப்படவுள்ளன.
இச்சேவைகளை பொதுமக்களின் நலன்கருதி மேற்கொள்ளுமாறு சகல சாலை முகாமையாளர்களுக்கும் விசேட பணிப்புரைகளை பிரதம பிராந்திய முகாமையாளர் நசீர் விடுத்துள்ளார். |