* ஐ. சி. ஆர்.சி. தெரிவிப்பு
வடக்கே நடைபெறும் மோதல்களில் கொல்லப்படும் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த 112 பேரினது உடல்களை இவ்வருடம் முதல் மூன்று மாதங்களில் இரு தரப்பிடையேயும் பரிமாறியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் இதில் எத்தனை படையினரது உடல்கள், எத்தனை விடுதலைப்புலிகளது உடல்களென ஐ.சி.ஆர்.சி எதுவும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து ஐ.சி.ஆர். சி.யின் தகவல் அதிகாரியான சரசி விஜயரட்ன கூறுகையில்,
வடக்கே மன்னார், வவுனியா மற்றும் மணலாறு போன்ற வெவ்வேறு பகுதிகளில் வைத்து ஐ.சி.ஆர்.சி.யினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.
இதேபோல், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைத்து உடல்கள் ஒப்படைக்கப்பட்டு அவை ஓமந்தை இராணுவ சோதனை நிலையமூடாக அனுப்பப்படும்.
இதேநேரம், விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் ஐந்து படையினர் உள்ளனர்.இதில் நால்வர் கடற்படையினர்,ஒருவர் இராணுவத்தைச் சேர்ந்தவர்.
இந்த ஐவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இவர்களைப் பார்வையிட அவர்களது குடும்பத்தவர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.