க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதாக தெரிவித்த ஆணையாளர் அநுர எதிரிசிங்க www.doenets.lk என்ற இணையத் தளத்தில் பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியுமெனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த வருட க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கொழும்பு நகர் பாடசாலை அதிபர்கள் நேரடியாக பரீட்சை திணைக்களம் வந்து முடிவுகளை பெற்றனர்.
நேற்று ஏனைய பிரதேச பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை முடிவுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன.
பரீட்சை முடிவுகளை எமது திணைக்கள இணையத்தளத்தில் பார்வையிட முடியும். இன்று புதன்கிழமை அகில இலங்கை ரீதியாக கூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர் பெயர் விபரங்கள் வெளியிடப்படுமென்றார்.