Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
[02 - April - 2008] [Font Size - A - A - A]
* நிலைமைக்கு அரசே பொறுப்பு; ஜனாதிபதிக்கு மாவை கடிதம்

அரசாங்கத்தின் நிர்வாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் யாழ். குடாநாட்டு மக்களின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அதனை சீர்ப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் அரசினுடையதே என்றும் தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு யாழ்.மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா அவசரக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அத்துடன், கடந்த இரு வருடங்களாக நிலைமை மிக வேகமாக மோசமடைந்து கொண்டு செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அரசாங்கத்தின் கடுமையான பாதுகாப்புத் தொடர்பாக சுட்டிக்காட்டத் தேவையில்லையெனவும் உதாரணமாக ஒவ்வொரு 10 மீற்றர் தூர இடைவெளிக்கும் ஒரு இராணுவ சோதனைச் சாவடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள மாவை எம்.பி. மேலும் தெரிவித்திருப்பதாவது;

"தினமும் மாலையிலிருந்து காலை வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதனால், அவசரத் தேவைகளுக்கு கூட மக்கள் வெளியே செல்ல முடியாத நிலைமை உள்ளது. அதேசமயம் இனந்தெரியாத ஆயுதபாணிகள் இலக்க தகடற்ற வான்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊரடங்கு அமுலிலுள்ள நேரத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் கடத்தல் நடவடிக்கைகளிலும் நகை, பணம் என்பனவற்றை கொள்ளையடிப்பதிலும் ஈடுபடுகின்றனர். அரைவாசிப் பேர் வெளியே காவலுக்கு நிற்கும் போது மீதிப்பேர் உள்ளே சென்று இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இளப் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் இடம்பெறுகின்றன.

கடத்தல்கள் பின்னர் காணாமற் போதல் படுகொலைகளில் முடிவடைகின்றன. மிக மோசமான விளைவுகள் ஏற்படுமென்ற அச்சத்தால் அநேகமான இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் முறையிடுவதில்லை.

இத்தகைய மோசமான சூழ்நிலையால் பொருளாதார ரீதியிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னொரு போதுமில்லாத அளவுக்கு குடாநாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கிறது. தெற்கிலும் பார்க்க படுமோசமான விதத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதுடன் 90 சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டு பரம ஏழைகளாகியுள்ளனர்.

இத்தகைய நிலைமைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்புமாகும். இது தொடர்பாக சாதகமான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளுமாறு தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்" என்றும் மாவை சேனாதிராஜா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com