* இராமநாதன் மகளிரில் 9 மாணவிகளுக்கு 10 ஏ
நேற்று வெளியான க.பொ.த. சாதரணதரப் பரீட்சை பெறுபேறுகளில் கொழும்பு பாட சாலை மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 மாணவர்கள் 10 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
18 மாணவர்கள் 9 ஏ சித்தியையும், 46 மாணவர்கள் 8 ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலிருந்து இம்முறை 135 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இவர்களில் 9 மாணவிகள் 10 ஏ சித்தியையும்,7 மாணவிகள் 9 ஏ சித்தியையும்,13 மாணவிகள் 8 ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை தெஹிவளை தமிழ் வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 11 மாணவர்களில் 7 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.