Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
[02 - April - 2008] [Font Size - A - A - A]
* மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு குற்றச்சாட்டு

ராய்ட்டர் செய்திச்சேவை

2006 இல் இடம்பெற்ற கடல்கோள் நிவாரணப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை தொடர்பாக பாதுகாப்புப்படையினரை குற்றம் சாட்டியிருக்கும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு, இச்சம்பவத்தை வெளிப்படையாக அரசாங்கம் மூடி மறைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

`அக்ஷன் கொன்ட்ரீ லாபாய்ம்' (பட்டினிக்கு எதிரான இயக்கம்) என்ற பிரெஞ்சு தன்னார்வ தொண்டர் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் படுகொலையுண்ட சம்பவமானது 2003 இல் பாக்தாத்தில் ஐ.நா.கட்டித்திற்திகுள் இடம்பெற்ற மனிதாபிமான பணியாளர்கள் மீதான தாக்குதலின் பின் இடம்பெற்ற மிகமோசமான தாக்குதலாக கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 2006 இல் மூதூரில் இந்தப் படுகொலை இடம்பெற்றது. படுகொலையுண்ட தமிழர்கள் 17 பேரும் கடல்கோள் நிவாரணப் பணியில் ஈடுபட்டவர்களாகும்.

படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்களில் இவர்கள் சிக்குண்டவர்களென்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தப் படுகொலையைப் புரிந்தவர்கள் உள்ளூர் ஊர்காவல்படைவீரரும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் என்று இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு பெயர் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸார் உட்பட அரசின் பாதுகாப்புப் படைகளே 17 நிவாரணப் பணியாளர்களையும் கொன்றதாக சாட்சியம் வெளிப்படுத்துவதாகவும் இதனை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூடி மறைத்துவிட்டதாகவும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜன்கூல் தெரிவித்திருக்கிறார்.

மோதல் தருணத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவது போர்க்குற்றமாகும். குற்றவாளிகளும் அவர்களின் மேலதிகாரிகளும் நீதி விசாரணைக்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

படுகொலை இடம்பெற்ற சமயத்தில் அநேகமான மூதூர்வாசிகள் இடம்பெயர்ந்து விட்டனர். பின்னர் முதலுதவிக்குழு நகருக்குச் பட்டினிக்கு எதிரான இயக்கத்தின் வளாகத்தில் இறந்தவர்களின் உடல்களைக் கண்டுள்ளது. சமீபமாக இருந்து சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததுடன் விடுதலைப் புலிகளே இதனைச் செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முதல்நாள் முஸ்லிம் ஊர்காவல் படைவீரரின் சகோதரர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதற்காக பழிவாங்குவதாக அவர் சூளுரைத்திருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது. அத்துடன், எந்தவொரு தமிழ் பேசுவோர் சாதாரண உடையில் தென்பட்டாலும் முடித்துவிடுமாறு நகரிலிருந்த விசேடபடைகளின் தளபதி பாதுகாப்புப் படையினருக்கு கட்டளையிட்டதாக அறிக்கை மேலும் தெரிவித்தது.

அதாவது, சந்தேகத்தின் பேரில் எவர் காணப்பட்டாலும் முடித்துவிடுமாறு பணித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, படுகொலைச் சம்பவத்தின் பின்னர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் `மகிழ்ச்சிக் கொண்டாட்டம்' இடம்பெற்றதாக சாட்சிகள் விபரித்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் ஊர்காவல் படைவீரரின் விசனமானது ஏதோவொன்றைச் செய்ததற்கான போலிக்காரணமெனவும் அருகிலுள்ள திருகோணமலை நகரிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் கொலைகளின் பின்னணியில் இருந்ததாகத் தென்படுவதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 2006 முற்பகுதியில் இடம்பெற்ற 5 தமிழ் மாணவர்கள் படுகொலைச் சம்பவமும் மூடிமறைக்கப்பட்டதாகவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகளில் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் இது சிறப்புரிமையை தயாரிக்கும் கலாசாரமெனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் அறிக்கையை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசாரணைப் பணியின் புத்திசாலித்தனமான பணி என்று வர்ணித்திருக்கிறது.

பட்டினிக்கு எதிரான இயக்கப் பணியாளர்களின் குரூரப் படுகொலைக்கு பொறுப்பானோரின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளதுடன் படுகொலை தொடர்பான அரசாங்கத்தின் விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் மீதான தந்திரமான விளையாட்டு என்பதை வெளிப்படுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை நெருக்கடியின்றி தயாரிக்கவில்லையெனவும் குறிப்பாக 3 சாட்சிகள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவும் நான்காவது சாட்சி காணாமல் போய் விட்டதாகவும் ஏனையோர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com