* 9 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட நேற்று செவ்வாய்க்கிழமை ஈழவர் ஜனநாயக முன்னணியும் சுயேச்சைக் குழுவொன்றும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன.
இத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை வியாழக்கிழமை நண்பகலுடன் முடிவடையும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை ஒன்பது சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ள அதே நேரம், ஈழவர் ஜனநாயக முன்னணியும் சுயேச்சைக் குழுவொன்றும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ராஜநாயகம் பிரபாகரனை தலைமை வேட்பாளராகக் கொண்டு ஈழவர் ஜனநாயக முன்னணி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வேட்புமனுவை சுந்தரலிங்கம் திருமஞ்சனம் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.
இதேநேரம், ஜாகூர் முஹமட் ஜமால்தீன் தலைமையில் சுயேச்சைக் குழு ஒன்றும் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேலும் நான்கு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.