சென்னை டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் ஆமதாபாத் சென்றனர்.
இந்திய- தென்னாபிரிக்க அணிகளிடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர்களில் டெண்டுல்கர், ஷேவாக், கங்குலி, டிராவிட், கும்பிளே உள்ளிட்ட 7 வீரர்கள் உடனடியாக தனித்தனியாக விமானம் மூலம் தங்கள் ஊருக்குச் சென்று விட்டனர்.
தென்னாபிரிக்க அணி வீரர்கள் மற்றும் இந்திய அணியின் 8 வீரர்கள் நேற்று முன் தினம் பகல் 2 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு ஆமதாபாத் சென்றனர். அவர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் பயணம் மேற்கொண்டனர்.
இந்திய- தென்னாபிரிக்க அணிகளிடையேயான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நாளை 3 ஆம் திகதி தொடங்குகிறது.