Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
மியாமி ஓப்பன் டெனிஸ் போட்டி 3 ஆவது சுற்றில் டேவன்போர்ட் வெற்றி
[02 - April - 2008] [Font Size - A - A - A]
மியாமி டெனிஸ் போட்டியின் 3 ஆவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டேவன்போர்ட், செர்பிய வீராங்கனை அனா இவானோவிச்சை வீழ்த்தினார்.

அமெரிக்காவில் மியாமி நகரில் சோனி எரிக்சன் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4 ஆவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் நிகோலாய் கிபெரை தோற்கடித்து 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3 ஆவது சுற்று ஆட்டமொன்றில் உலகின் 33 ஆம் நிலை வீராங்கனை லிண்ட்சே டேவன்போர்ட் (அமெரிக்கா), 2 ஆம் நிலை வீராங்கனை அனா இவானோ விச்சை சந்தித்தார். இதில் டேவன்போர்ட் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் அனா இவானோ விச்சை வீழ்த்தி 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஜஸ்ரின் ஹெனின் (பெல்ஜியம்), ஸ்வெட்லானா குனெட்சோவா (ரஷ்யா), ஜெலீனா ஜோகோவிச் (செர்பியா), வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), எலீனா டெமென்டிவா (ரஷ்யா), அய் சுஜியமா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று 4 ஆவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

Email this page Your Opinion Print this page
உலகம் சுற்றத் தொடங்கியது ஒலிம்பிக் தீபம் நாட்களில் 1,37,000 கி.மீ. தூரம் பயணம் செய்யும்
`ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை அமெரிக்க ஜனாதிபதி புறக்கணிக்க வேண்டும்'
2010 உலகக் கிண்ண ஹொக்கி போட்டி இந்தியாவிலிருந்து மாற்றப்படலாமென எச்சரிக்கை
மியாமி ஓப்பன் டெனிஸ் போட்டி 3 ஆவது சுற்றில் டேவன்போர்ட் வெற்றி
இந்திய, தென்னாபிரிக்க வீரர்கள் தனி விமானங்களில் ஆமதாபாத் சென்றனர்
இங்கிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்கார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com