|
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி, போரதீவுப் பற்று காட்டுப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 18 ஆம் திகதி மாலை இரு கிளைமோர் குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்றுக் காலை இப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
உரப் பொதிகளால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த இக்கிளைமோர் குண்டுகள், ரோந்தில் ஈடுபடும் படையினரை இலக்கு வைக்கவே இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. |