அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை அரிசிக்கு விதித்துள்ள நிலையில், யாழ்ப்பாண வர்த்தகர்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி நாளுக்கு நாள் அரிசியின் விலையை அதிகரித்துவருகின்றனர்.
யாழ். மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவிடயமாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் யாழ். செயலக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருவதாக மக்கள் கவலையடைந்துள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலம் எடுத்துவரும் அரிசிக்கான கட்டுப்பாட்டுவிலையை, அத்தியாவசிய சேவைகள் நாயகமோ, அரசாங்க அதிபரோ இதுவரை அறிவிக்காமையையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.