கிரியெல்ல, குருவிற்ற, எகலியகொட பிரதேசங்களில் புதிதாக பரவிவரும் காய்ச்சல் காரணமாக தினமும் 100 க்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைவலி, கை, கால் வலியே இக்காய்ச்சலுக்கு முன் அறிகுறி என்பதுடன், இதுவரை கிரியெல்லை வைத்தியசாலையிலும் எகலியகொடை வைத்தியசாலையிலும் 750 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதேவேளை காய்ச்சல் காரணமாக கிரியெல்லை பகுதியில் வயதான பெண்கள் மூவர் இறந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்த போதிலும், வைத்திய பரிசோதனையில் இம்மரணத்துக்கான காரணம் கூறப்படவில்லை.