Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வடக்கு - தெற்கு மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தை அடையலாம்
[20 - April - 2008] [Font Size - A - A - A]
*மன்னார் ஆலய வண பிதா தெரிவிப்பு

வடக்கு- தெற்குப் பகுதி மக்களிடையே தொடர்பினை ஏற்படுத்தி அதன் ஊடக பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலமே சமாதான பாதையை நோக்கிச் செல்ல முடியுமென மன்னார் ஆலய வண பிதா விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.

தென் பகுதியிலிருந்து மன்னாரின் நிலை குறித்த உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் வகையில் அங்கு விஜயம் செய்த நல்லிணக்கக் குழுவினருடனான சந்திப்பிலேயே மன்னார் ஆலய தந்தை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு விஜயத்தை மேற்கொண்டதன் மூலம் இப்பகுதி மக்கள் படும் கஷ்டங்களை நேரடியாகக் கண்டு கொண்டீர்கள், இதனை தென்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்.

குறிப்பாக, இன்று வடக்கும் தெற்கிற்குமிடையில் போக்குவரத்துத் தடை காரணமாக இரு பகுதி மக்களிடம் புரிந்துணர்வு குறைவடைந்து செல்கின்றது. எனவே, இரு பகுதி மக்களுக்கும் சுதந்திரமாகப் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி அவர்களுக்கிடையில் உறவுப் பாலம் அமைத்து இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.

இந்த பரஸ்பர உறவை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டில் சமாதானத்தை எட்டுவதற்கான பாதை நோக்கி நகர முடியுமென தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் இப்பகுதி மக்கள் படும் இன்னல்களைத் தென்பகுதி மக்களுக்கு எடுத்துரைப்பதாக உறுதியளித்ததுடன், மன்னாரிலுள்ள அகதிமுகாம், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள், அரச அதிபர் உட்பட சமயத் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டும் எதிர் நோக்கும் பிரச்சினையைக் கேட்டறிந்தனர்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் மீதான உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுங்கள்
கிழக்கில் மேலாதிக்கத்தை அமுல்படுத்த நினைக்கும் அரசின் நோக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்
எரிபொருட்களின் விலைகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை
வேலூரில் நளினியை பிரியங்கா சந்தித்த இடம் தொடர்பாக சர்ச்சை
கனடிய வெளிவிவகார அமைச்சரை பதவி விலக எதிரணி வலியுறுத்தல்
மைத்திரிபால சிறிசேன லண்டனில் மங்களவுடன் இரகசிய சந்திப்பு?
ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவராக பிமல் கட்சியின் பிரசார செயலாளராக சுனில் ஹந்துநெத்தி
நாளை முதல் வாக்காளர் அட்டை விநியோகம்
ஜெயராஜை கொலை செய்யும் திட்டம் தெஹிவளை அத்திட்டியவில் தயாரிப்பு
சிலாவத்தையில் கடும் விமானத் தாக்குதல்
உள்ளூரில் போதியளவு நெல் கையிருப்பில் இருக்கும் போது அரிசிக்கு ஏன் தட்டுப்பாடு?
சிலாவத்தையில் கடும் விமானத் தாக்குதல்
ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு
குடும்பஸ்தர் குத்திக்கொலை
வட போர் முனை மோதல்களில் படைவீரர் பலி,9 பேர் காயம்
இலங்கை தொடர்பாக ஒஸ்லோவில் கருத்தரங்கு
வடக்கு - தெற்கு மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தை அடையலாம்
குடாநாட்டில் குற்றச்செயல்களை தடுக்க விழிப்புக் குழுக்களை அமைக்க நடவடிக்கை
அவரிவத்தையில் தொழில்புரியும் மலையக வாலிபர் பொலிஸாரால் கைது
புதுவித காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 750 பேருக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை
கிழக்கில் அடுத்த வாரம் முதல் ஐ.தே.க. தீவிர பிரசாரத்தில் இறங்கும்
இலங்கைத் தமிழருக்கு போலி கடவுச்சீட்டு விசாக்கள் தயாரித்த இருவர் கைது
யாழ்.குடாநாட்டில் அரிசி விலை அதிகரிப்பு
போரதீவில் இரு கிளைமோர்கள் மீட்பு
இடம்பெயர்ந்த அல்லைப்பிட்டி மக்கள் மீளவும் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com