மதவாச்சி, றம்பாவ, கினிகெட்டுவெவ கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூரிய ஆயுதமொன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மிகிந்தலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மகாநாம தெரிவித்தார்.
நாற்பது வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளவராவார். படுகாயமடைந்த நிலையில் றம்பாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட குரோதம் ஒன்றின் காரணமாகவே இவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இதே கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மிகிந்தலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.