கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றினை ஏறாவூர் பொலிஸார் நேற்று கைப்பற்றினர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஏ.கே.எம். வீதியிலுள்ள இறைச்சிக்கடையின் பின்புறத்திலிருந்து இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குண்டு மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பிரதேசத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் பலரை பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். எனினும், எவரும் கைது செய்யப்படவில்லை.