*ஐ.தே.க. கேள்வி
நாட்டில் போதியளவு அரிசி இருக்குமாயின் ஏன் அரசாங்கம் அரிசிக்கு நிர்ணய விலையை விதித்து அரிசி வர்த்தகர்களை அச்சுறுத்துகின்றதென ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
`அரிசியின் விலை நாம் முன்னர் கூறியது போல 100 ரூபாவுக்குச் சென்ற நிலையில் அரசாங்கம் தற்போது கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளது. நாட்டில் போதியளவு அரிசி இருக்குமாயின் ஏன் அரிசி விலை இவ்வாறு உயரப் போகின்றது.
உள்ளூரில் போதியளவு நெல் இருக்கின்ற நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் வெங்காய கொள்வனவு போல் அமைச்சர்களின் தலையீடு இருப்பதே இதற்குக் காரணமாகும். நாட்டில் போதியளவு அரிசியிருக்குமாயின் கூட்டுறவுச் சங்கம், சதோச மூலம் மக்களுக்கு விநியோகிக்காமல் அரிசி இறக்குமதி வர்த்தகர்களை அரசாங்கம் அச்சுறுத்தி கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விநியோகிப்பது எந்த வகையில் நியாயமானதெனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.