முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் குடியிருப்பு மீதும் கடல் தொழிலாளர் துறைகளின் மீதும் விமானப் படை விமானங்கள் நேற்று சனிக்கிழமை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தின.
நேற்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற இத்தாக்குதலில் கோணேஸ்வரன் (வயது 35) என்பவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் மீன் பிடிப்படகு ஒன்று முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் 3 படகுகள் மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.