இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) நடத்தும் `ருவென்ரி-20' போட்டியில் நேற்று சனிக்கிழமை பஞ்சாப்பில் நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்ப கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்ப கிங்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் மைக்கல் ஹசி 54 பந்தில் 114 ஓட்டங்களை (9x6,8x4) ஆட்டமிழக்காது பெற்றதுடன், ரெய்னா 13 பந்தில் 32 ஓட்டம், பத்திரிநாத்-31, மத்யூஹைடன்-26, தோனி-2 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் பதான் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை பெற்றது.
இதில் ஹோப்ஸ்-33 பந்தில் 71 ஓட்டங்களையும் (10x4,3x6) குமார் சங்ககாரா-54, கோயல்-24,யுவராஜ்சிங்-23, கட்டிச்-21 (ஆட்டமிழக்காது) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் முரளிதரன், கோணி, அமரநாத், ஜோகிந்தர் சர்மா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.