Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
`பிரியங்காகாந்தியுடனான எனது சந்திப்பு விடுதலை பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது'
[21 - April - 2008] [Font Size - A - A - A]
மர்மமாக நடந்து முடிந்த ஒரு பயணத்தின்போது வேலூர்ச் சிறையில் தன்னுடைய தந்தை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசினார் என்ற செய்தி வெளியானதிலிருந்து நாடு முழுவதும் ஊடங்கள் பரபரப்பாகிக் கிடக்கின்றன.

யாராலும் கற்பனையாகக் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத இந்தச் சந்திப்பைப் பற்றி பிரியங்காவும் ராகுல்காந்தியும் கூட கருத்துத் தெரிவித்துவிட்டனர். ஆனால், நளினி தரப்பில்....?

வேலூர்ச் சிறையை ஊடகத்துறையே ஒட்டுமொத்தமாகத் தொடர்ந்து சுற்றிவந்தபோதும் ஒருவரையுமே சந்திக்க மறுத்துவிட்டார் நளினி. வேறு பார்வையாளர்களையும் அவர் சந்திக்கவில்லை. ஆனால், முதன்முதலாக நளினியின் கணவரான முருகன் என்ற சிறிகரன் நமக்குத்தான் பேட்டியளித்திருக்கிறார் என்ற நம்பிக்கையைக் கையில் பற்றிக்கொண்டு நளினியைச் சந்திப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினோம்.

வியாழக்கிழமை வேலூர் சிறை வாசலில் நாம். ஆனால், நம்மையும் நேரடியாகச் சந்திக்கவில்லை. எனினும், கருத்தறிய வந்திருப்பது குமுதம் ரிப்போர்ட்டர் என்பதை நம்முடைய சிறைத் தொடர்புகள் மூலம் உள்ளே அவரிடம் தெரிவிக்கச் செய்தோம். பின்னர் நம்மிடம் அவருடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து நாமும் அந்தத் தொடர்பாளர் மூலமே நமது கேள்விகளுக்கான நளினியின் பதில்களைப் பெற்றோம்.

அப்போது நளினி தெரிவித்த பேட்டி:

சிறையில் இத்தனை ஆண்டுகளாக எவ்வாறு பொழுதைக் கழித்து வருகிறீர்கள்?

"நான் பதினேழு ஆண்டுகளுக்கும் அதிகமாகச் சிறையில் இருந்துகொண்டிருக்கிறேன். இதுவரை என் மீது எந்தவிதக் குற்றச்சாட்டும் வந்ததில்லை. இந்திய சிறைத் துறை வரலாற்றிலேயே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட பெண் கைதிகளில், இந்த அளவு அதிகமான ஆண்டுகள் சிறையில் கழித்துக்கொண்டிருப்பது நான் தான்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதிகளை ஏழு ஆண்டுகளில் விடுதலை செய்துவிடுகின்றனர். ஆந்திராவில் அண்மையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்த நிலையில் ஆயுள்தண்டனை பெற்ற பெண் கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.

நான் வெறும் பட்டதாரியாகச் சிறைக்கு வந்தேன். சிறையில் இருந்தபடியே ஆறு டிப்ளோமா படிப்புகளை முடித்திருக்கிறேன். மாஸ்டர் ஒப் கம்பியூட்டர் அப்ளிகேஷன்ஸ் எனப்படும் எம்.சி.ஏ. படிப்பை முதல் வகுப்பில் சித்தி அடைந்துள்ளேன். படிப்பு, என் மகள் ஹரித்ரா பற்றிய சிந்தனை... என்றே இத்தனை

"தந்தையின் கொலைச் சம்பவம் பற்றியும் வழக்குப் பற்றியும் அவர் என்னிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். அவற்றில் ஜெயின் கமிஷன் பற்றியும் விசாரித்தார். ஆனால், உண்மையிலேயே எனக்கு எதைப் பற்றியும், எந்த விவரமும் தெரியாது என்பதை வெளிப்படையாகவும் உண்மையாகவும் அவரிடம் கூறிவிட்டேன். என்னுடைய பேச்சிலிருந்த உண்மையை பிரியங்காவும் நன்றாகவே உணர்ந்துகொண்டார் என்று நம்புகிறேன்".

உங்களை விடுதலை செய்வது தொடர்பாக பிரியங்கா ஏதாவது உத்தரவாதம் அளித்தாரா?

"எங்கள் இருவருடைய பேச்சிலும் என்னுடைய விடுதலை தொடர்பான ஒரு சொல்கூட இடம்பெறவில்லை. இந்த முதல் சந்திப்பிலேயே என்னுடைய விடுதலைக்கான கோரிக்கையை அவர் முன்வைக்கின்ற சூழ்நிலையும் மனநிலையும் அப்போது என்னிடம் இல்லை. ஆனாலும், இந்த நாட்டையே கட்டியாள்கிற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்து என்னைச் சந்தித்ததே எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது".

மீண்டும் உங்களைச் சந்திப்பதாக பிரியங்கா ஏதேனும் தெரிவித்தாரா?

"அப்படி எதுவும் கூறவில்லை. நான் அவருடைய தாய் சோனியா காந்திக்கு எழுதிய கடிதங்கள் பற்றிய விபரங்களைக் கூறினேன். மிகுந்த அனுதாபத்துடன் அவற்றையெல்லாம் கேட்டார் அவர். தந்தையின் படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் என்னைச் சந்தித்துக் கனிவுடன் பேசியதே பெரிய விடயம் தானே".

உங்களுடைய விடுதலைக்குப் பிரியங்காவின் உதவி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

"உறுதியாக நம்புகிறேன். சோனியா காந்திக்கு நான் பல கடிதங்களை அனுப்பியிருக்கிறேன். அவர் தான் என்னுடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பரிந்துரை செய்தவர். நான் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதும்போதெல்லாம், அந்தக் கடிதம் அவரிடம் போய்ச் சேரும், கடிதத்துக்குப் பலன் கிடைக்கும், நான் விடுதலை அடைய வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொன்றையும் அனுப்பி வைப்பேன். கடிதங்களையே நம்பிக்கையுடன் அனுப்பிய எனக்கு, இந்த நேரடி சந்திப்பானது, அந்த நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. மேலும், வலுப்படுத்தியுள்ளது".

நீங்கள் விடுதலையான பிறகு காங்கிரஸில் இணையும் எண்ணம் இருக்கிறதா?

"அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. நான் எப்போதுமே எந்த அரசியல் கட்சியிலும் சரி, எந்த இயக்கத்திலும் சரி, என்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டதில்லை"

??-?[-P?-?h ???...

"பெருமை மிக்க குடும்பத்தின் அங்கம். தன்னுடைய தந்தையின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் என்னைச் சந்திக்க வந்திருக்கிறார். இப்படி எந்த எமோஷனும் இல்லாமல் மிக இயல்பாக என்னிடம் அவர் பேசியதும் என் மீது அன்பும் பரிவும் காட்டி அவர் நடந்துகொண்ட விதமும் பிரியங்கா மீது ஏற்கெனவே எனக்கு இருந்த மதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது".

இந்த சந்திப்பு குறித்து உங்கள் கணவர் முருகன் என்ன கருதுகிறார்?

"நானும் என்னுடைய கணவர் சிறிகரனும் மகள் ஹரித்ராவை சென்னையில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடர் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போது கூட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தான் முதன்முறையாக என்னுடைய கணவர் சிறிகரனின் பேட்டியை வெளியிட்டிருந்தீர்கள். அதில் கூட நாங்கள் இருவரும் உயிர்வாழ்வதே எங்கள் மகள் ஹரித்ராவுக்காகத்தான் என்று என் கணவர் கூறியிருந்தார். ஆனால், நாங்கள் எனது விடுதலைக்காகப் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறோம். காரணம், என் மகளுடன் வாழ்ந்து அவளை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான். ஒருவேளை பிரியங்காவின் சந்திப்பால் அதற்கான வழி கிடைத்தாலும் எங்கள் இருவருக்குமே அது மகிழ்ச்சிதான்".

A?-I ???...

பிரியங்கா- நளினி சந்திப்புக்கு முன் மார்ச் 11 ஆம் திகதி பிரியங்காவின் படத்தைக் கொண்டுவந்து காட்டி சந்திப்புக்கான ஒப்புதலை யாரோ அதிகாரி பெற்றதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது, முன்னதாக நளினியைச் சென்று சந்தித்தது. முக்கிய புள்ளியாக இருந்து எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தது வேலூரைச் சேர்ந்த ஞானமான ஒரு காங்கிரஸ் புள்ளிதான். வெளியே விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளராகத் திகழ்ந்துவரும் அவர்தான், காதும் காதும் வைத்தாற்போல இந்தச் சந்திப்பை ரகசியமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Email this page Your Opinion Print this page
இலங்கையில் பாடசாலைக்கல்வித்தராதர மேம்பாட்டு சீர் திருத்தங்கள் - பாடசாலை மட்ட முகாமைத்துவம்
கிழக்கு மாகாணத்தின் முதன்மை இனத்தவர்கள் தமிழர்கள் என்பதை கணிப்பீடுகள் உறுதிசெய்கின்றன
மனித உரிமைகளும் சித்திரவதைக் கொடுமைகளும்
`பிரியங்காகாந்தியுடனான எனது சந்திப்பு விடுதலை பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com