Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
கொழும்பில் ரொறிங்டன் வழியாகச் சென்ற ஒரு தனியார் பஸ்ஸில் பயணித்தவர் தெரிவித்த சுவாரஸ்யமான தகவல் இது.

இவர் பஸ்ஸில் ஏறிய பின் நடத்துநர் கட்டணத்தை வசூலித்தாரே தவிர ரிக்கெட் கொடுக்கவில்லை. இதேபோல் ஏனைய பயணிகளிடமும் ரிக்கெட் வழங்காமல் பணம் வசூலிக்கப்பட்டது.

பஸ் சாரதி ரொறிங்டனில் பஸ்ஸை திடீரென நிறுத்திவிட்டு "எல்லாருக்கும் சீக்கிரமாக ரிக்கெட் கொடு" என்று நடத்துநருக்கு அவசர குரல் கொடுத்தார்.

உடனே நடத்துநர் டிக்கெட் புத்தகத்திலிருந்து சடுதியாகக் கிழித்து ரிக்கெட்டுகளை அனைத்து பயணிகளுக்கும் வழங்கினார். இதன் பின்னர் பஸ் மீண்டும் புறப்பட்டது. சற்று நேரத்தில் அங்கு நின்ற திடீர் சோதனைக் குழுவினர் பஸ்ஸில் ஏறி ஒவ்வொரு பயணிகளிடமும் ரிக்கெட் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்தனர்.

இப்போது புரிகிறதா. பஸ் ஏன் திடீரென நிறுத்தப்பட்டது என்பது! சட்டம் என்னடா ,சோதனை என்னடா!

 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com