நெடுந்தீவுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக நெல் வேளாண்மை உயர் விளைச்சலை அடைந்துள்ளதாக யாழ். மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்தார்.
நெடுந்தீவில் நெழுவிணி நெய்குளம், சிறுகரை, எருவிளிக்குளம், வெல்லைகணக்கந்தரைப் பகுதிகளில் இருபத்தைந்து ஹெக்டேயருக்கு மேலான வயல்காணிகளில் நெல்வேளாண்மை மேற்கொள்ளப்பட்டதென்றும், ஏக்கருக்கு முப்பத்தைந்து புசல் நெல் விளைச்சல் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தின் பயிர் வளர்ப்போம் நாட்டைக்காப்போம் திட்டத்துக்கு அமைய நெடுந்தீவு விவசாயிகளுக்கு காலநேரத்துடன் விதைநெல் வழங்கப்பட்டமை, மானிய அடிப்படையில் பசளை விநியோகம் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டமையாலேயே இந்த உயர் விளைச்சலைப் பெற்றதுடன், அவர்களுக்கு விவசாயிகள் இவ்வாண்டு காலபோகத்துக்கு தேவையான விதைநெல்லை சேமிக்கக் கூடியதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.