* மேல்மாகாண முதலமைச்சர் கூறுகிறார்
மாகாண சபையின் பொறுப்பிலிருந்து விடுபட்ட சில பாடசாலைகள் இன்று அநாதரவான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
பின்னடைவான இந்த நிலையைத் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை பாடசாலைகள் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
தர்காநகர் முஸ்லிம் கல்லூரிகளின் வளநிலைமைகள் குறித்து நேரடிக் கவனத்திற்கொள்ளும் வகையில் மேற்கொண்ட விஜயத்தின்போது கல்லூரி அதிபர் பழைய மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
இச்சந்திப்பில் அதிபர் எம்.எஸ்.எம். றம்சா ,பிரதேச சபைத் தலைவர் பியல் நிசாந்த மற்றும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் , பழைய மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த மாணவிகளைச் சந்தித்த முதலமைச்சர் அவர்களுடன் தமிழில் உரையாடி விபரங்களைக் கேட்டறிந்து கொண்டார்.
இக்கல்லூரி முன்னைய காலங்களில் நாட்டின் பிரபல முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.