Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அஷ்ரப் மறைவுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?
[21 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் பேரியல் அஷ்ரப் கேள்வி

அஷ்ரப் மறைவுக்கு பின்னர் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் கடந்த ஏழரை ஆண்டுகளில் முஸ்லிம் மக்களுக்கு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்து கொடுத்தது என்னவென அமைச்சர் பேரியல் அஷ்ரப் கேள்வியெழுப்பியுள்ளார்.

அம்பாறையில் வியாழக்கிழமை இடம்பெற்ற வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பிய பேரியல் அஷ்ரப் மேலும் தெரிவித்ததாவது;

கிழக்கில் உள்ள பள்ளிவாசல், உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக இயக்கங்கள் எல்லாம் இணைந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்றுபட்டு வாருங்கள் என்று கோஷமிட்டனர். அதற்கென கடந்த மாதம் ஒரு தினத்தில் பாராளுமன்றத்தில் உம்மா கட்சியினர், உலமாக்கள் இணைந்து ஒன்றுகூட்டினார்கள். அதில் நான் உட்பட அமைச்சர்கள் ரிசாத்பதியுதீன், அதாவுல்லா, அமீர் அலி, மயோன் முஸ்தபா, அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ரவூப் ஹக்கீம், ஹசன் அலி, பசீர் சேகுதாவூத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அவர்களிடம் இத்தேர்தலில் கிழக்கினைச் சேர்ந்த சகல பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பொதுவான ஒரு சின்னத்தில் கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறினோம். அமைச்சர் அதாவுல்லாவை பிரதம அமைச்சராக அல்லது ஹசன் அலியை முதல் அமைச்சராக வைத்து போட்டியிடுவோம் என்றும் கூறினோம். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கிழக்கில் அதன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க முடியாது. அதன் போராளிகள் கட்சி உறுப்பினர்கள் இதற்கு உடன்படமாட்டார்கள் என்று ஹக்கீம் கூறினார்.

யாராவது வந்து என்னுடன் இணைந்து கடல்கோள் அனர்த்த மீள்கட்டுமான வேலைகளில் ஈடுபட்டார்களா? அல்லது ஆகக் குறைந்தது ஆதரவாவது தெரிவித்தார்களா? தேர்தல் காலத்தில் மட்டும் இப்பகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் கேட்பதற்கு மட்டுமே வருகின்றனர். சவூதி அரசினால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 500 வீடுகளைக் கட்டுவதற்கு காணிப்பிரச்சினை ஏற்பட்டது. அவ்விடத்தில் பெரும்பான்மையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அட்டப்பள்ளத்தில் வீடுகட்டுவதற்கு காணிப்பிரச்சினை ஏற்பட்டது. பொத்துவிலிலும் வீடுகட்டுவதற்கு பிரச்சினை ஏற்பட்டது. இவற்றையெல்லாம் அணுகுகின்ற சில வழிமுறைகள் உள்ளன.

சவூதி வீடமைப்புத் திட்டம் பற்றி அக்கரைப்பற்று நுரைச்சோலை காணி சம்பந்தமாக ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் பிரச்சினைகளை தெரிவித்தேன். அவர் அதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்துக்கொடுத்தான் பயனாகவே இன்று அக்கரைப்பற்றில் 500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பிரச்சினைகள் ஏற்படாவண்ணம் பொலிஸ் காவலரண் கூட அமைக்கப்பட்டுள்ளது. கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை காணியின்மையால் தான் கடல்கோள் அனர்த்த மீள்கட்டமைப்பு காலம் தாழ்த்தப்பட்டது. காணிகளில் மண் நிரப்புவதற்கே நீண்ட காலம் எடுபட்டது. தற்போது அப்பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கில் உள்ள சிங்கள மக்கள் கிழக்கை விடுவித்ததன் பயனாக ஒட்டுமொத்தமாக இந்த அரசுக்கு ஆதரவளிக்க காத்து நிற்கின்றனர். அதேபோன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த பிள்ளையான் குழுவினரும் அரசை ஆதரிக்கின்றனர். சற்று சிந்தித்து பாருங்கள். எமது பகுதியில் அபிவிருத்தி ஏதாவது நடைபெற்றுள்ளதென்றால் அது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசிலேயே தான்.

இவ் வைபவத்தில் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களான எம்.பி.ஏ. அஸீஸ், சாய்ந்தமருது சலீம், மருதமுனை உவைஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

Email this page Your Opinion Print this page
நீர்வீழ்ச்சி மரணங்கள் அதிகரிப்பு கடந்த வருடங்களில் 801 பேர் பலி
மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு
ஈரானுடனான நெருக்கத்தால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்துகிறது
பாண்டிருப்பில் கணவன், மனைவியான கிராமசேவகர்கள் சுட்டுக் கொலை
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் தப்பி தமிழகம் சென்ற அகதிகள்
பிரான்ஸின் புதிய தூதுவர் லயனல் நியமனம்?
பிள்ளையான் குழு உறுப்பினர் சுட்டுக்கொலை
அதிபர், உபஅதிபர், முன்னாள் ஆசிரியர் நாவலப்பிட்டியில் ரி.ஐ.டி.யினரால் கைது
ஷெல் தாக்குதலில் ஒருவர் படுகாயம்
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத்தளபதியை அரசு அவசரமாக நியமித்தது
நுவரெலியா காரோட்டப் போட்டியில் ஒரு வீரர் பலி; இருவர் படுகாயம்
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் விமல் வீரவன்ச குழுவினர் சந்திப்பு
`இலங்கைக்கு எதிராக பொருளாதார இராஜதந்திர தடைகளை கனடா அமுல்படுத்த வேண்டும்'
இந்துசமய அறிவினையும் தத்துவங்களையும் வளர்க்க மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை
பல பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரி பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு
ஆட்சிமாற்றத்திற்குரிய தேர்தலாகவே இதனை தமிழ் பேசும் மக்கள் கருதுகின்றனர்
போலி வைத்தியர்களின் அதிகரிப்பால் உயிராபத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள்
கிழக்கு மாகாண சபை மன்றத்தின் செயலாளராக தியாகலிங்கம் நியமனம்
வெடி பொருட்கள் மீட்பு ஒருவர் தேடப்படுகிறார்
முன்னாள் இராணுவ மேஜர் அமைச்சருக்கு எதிராக மனு
பகவதி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஹெல உறுமய வலியுறுத்தல்
கோஷ்டி மோதலில் ஒருவர் பலி; இருவர் காயம்
வெள்ளை வானில் கடத்தப்பட்ட லொறிச் சாரதியை காணவில்லையென முறைப்பாடு
கடைகளில் திடீர் சோதனை
கண்டியில் தேடுதல் 12 பேர் கைது
இலங்கையில் ஐ.நா.வின் பணிகளை முடக்குவதற்கு திரைமறைவில் திட்டங்கள்
சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இலங்கை- இந்தியா கைச்சாத்து
வடகடல் நிறுவனத்தின் பணிகளை அதிகரிக்க ஐ.நா. அபிவிருத்தி திட்டம் 12.6 மி.ரூபா உதவி
கல்முனையில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த படகு இறங்குதுறைகள் அமைக்க நடவடிக்கை
யாழ்.ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்குவதில் தாமதம்
பெருமளவான வள ஒதுக்கீடுகளை கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நிலையில் மாணவர்களும் பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர்
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெறுவது அவசியம்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு
நித்தம்புவவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
ஈரானிய அரசின் நிதி உதவியுடன் கிழக்கில் புதிய வீடமைப்புத் திட்டம்
தமிழ் - முஸ்லிம்களின் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்
தேர்தலில் தோற்ற பின்னர் பாராளுமன்றத்துள் மீண்டும் நுழைவதற்கு ரவூப் ஹக்கீம் திட்டம்
கிழக்குமாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் போன்றது
அஷ்ரப் மறைவுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?
கிழக்குத் தேர்தலை வடக்கு , கிழக்கு இணைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பாக கருதுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
அரிசிக்கு உத்தரவாத விலை அறிவிப்பு அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை
மாகாண நிர்வாக பொறுப்பிலிருந்து விடுபட்ட பாடசாலைகள் இன்று அநாதை நிலையில்
நெடுந்தீவில் அமோக நெல் விளைச்சல்
தொழிற்சங்கங்களின் பலத்தை காட்டுவதற்கன்றி தொழிலாளரின் விடுதலைக்காகவே மேதினம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரைப் பாதுகாக்க மில்லலான தோட்டத்தில் காவல் நிலையம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com