நித்தம்புவ பிரதேசத்தில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மூன்று தமிழ் இளைஞர்களும் ஆறு சிங்கள இளைஞர்களும் ஒரு முஸ்லிம் இளைஞரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தொழில் செய்வதற்காக இங்கு வந்து தங்கியுள்ளனர் எனவும் ஆனால், தமது வதிவிடத்தை உறுதிப்படுத்தாததால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் என்பனவும் பொலிஸாரால் தீவிரமாக சோதனையிடப்பட்டிருந்தன.
வீடுகளில் உள்ளவர்களின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டன.